பட்டமேல் டிப்ளோமா நிகழ்ச்சித் திட்டத்தில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பம்!

Saturday, November 5th, 2016

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் விசேட தேவைகள் சார் கல்வி பட்டமேல் டிப்ளோமா நிகழ்ச்சித் திட்டத்தின் 2016/2017 கல்வியாண்டுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இக் கற்கை நிகழ்ச்சிதிட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்ற இளமானிப்பட்டம் அல்லது இலங்கை திறந்தப் பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதற்க சமனான தகைமைகள் உடையவராகவும் சாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அல்லது அதிபர், ஆசிரிய ஆலோசகராக அல்லது ஆசிரியர் கல்வியியலராக அல்லது கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தராக , அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் முழுநேர விரிவுரையாளராக அல்லது ஆசிரிய நிலைய முகாமையாளராக கல்வி புரிபவராகவும் 2015 டிசம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் பெற்று தொடர்ந்த சேவையில் இருப்பவராகவம் இருத்தல் வேண்டும். இந்த நிகழ்ச்சி திட்ட விண்ணப்ப்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை https:payment.ou.ac.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து வருவழி (online) முறையின் மூலம் விண்ணப்பிக்கமுடியும். இக் கற்கைக்கு விண்ணப்பிப்பதில் உதவி தேவைப்படுமிடத்து இலங்கை திறந்த பல்கலைக்கழக தலமையலுவலகம், பிராந்திய நிலையம் மறும் கற்கை நிலையங்களுடன் தொடர்பு கொண்டு உரிய முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil-Daily-News_98168146611

Related posts: