பட்டத்தை வென்றது யாழ். கல்வி வலயம்!

Wednesday, July 20th, 2016

வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலகைளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் 1795 புள்ளிகளைப் பெற்று யாழப்பாணக் கல்வி வலயம் சம்பியனாகியது.

வடமாகாண விளையாட்டுப் போட்டிகளின் பெரு விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தடகள மற்றும் மைதான போட்டிகள் கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில், புதிதாக மீளப்புனரமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதனடிப்படையில் பெருவிளையாட்டுப் போட்டிகளில் 1056 புள்ளிகளைப் பெற்றிருந்த யாழ்ப்பாணக் கல்வி வலயம் தடகள மற்றும் மைதானப் போட்டிகளில் 739 புள்ளிகளையும் பெற்று 1795 என்ற மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் சம்பியனாகியது.

இரண்டாமிடத்தை 1041 புள்ளிகள் பெற்ற வலிகாமம் கல்வி வலயமும், மூன்றாமிடத்தை 741 புள்ளிகள் பெற்ற வடமராட்சி வலயமும், நான்காமிடத்தை 719 புள்ளிகள் பெற்ற மன்னார் வலயமும் பெற்றுக்கொண்டன.

தொடர்ந்து இடங்களை கிளிநொச்சி -456, முல்லைத்தீவு 370, வவுனியா தெற்கு 310, துணுக்காய் – 256, தென்மராட்சி – 242, மடு – 188, வவுனியா வடக்கு – 114, தீவகம் 60 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டன.

.

Related posts: