பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன் சேவை பயிற்சி!
Wednesday, November 29th, 2017
வடமாகாண பாடசாலைகளுக்கு இவ்வாண்டு புதிதாக ஆசிரிய சேவை நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் முன்சேவை பயிற்சி எதர்வரும் 4 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதாவது உளவியல், புவியியல், குடியியல், வரலாறு ஆகிய பாட ஆசிரியர்களுக்கே இந்த முன்சேவை பயிற்சி இடம்பெறவுள்ளது. மேற்படி பயிற்சி வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாண கல்லூரியின் தொழில்நுட்ப அலுவலகத்திலும் சிங்கள பாட ஆசிரியர்களுக்கான முன்சேவை பயிற்சி வவுனியா மருக்காரம்பளை மாகாண தொடர்பாடல் தொழில்நுட்ப வள நிலையத்திலும் நடத்தப்படவுள்ளது.
மேலும் தமிழ், மனைப்பொருளியல், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஊடாக கற்கை ஆகிய பாடங்களுக்குரிய ஆசிரியர்களுக்கான முன்சேவை பயிற்சி எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 31 வரையான 21 நாட்கள் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்தார்.
Related posts:
|
|