பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்க அரசு இணக்கம்!

Thursday, March 24th, 2016

அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணங்கியுள்ளதாகவும்  தொழில்வாய்ப்பைக் கோரி விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் வயது எல்லை  45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான அறிக்கையினை சமர்ப்பித்திருப்பதாகவும் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அனைத்து மாகாணங்களிலும் காணப்படும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கான அதிகாரிகள் ஆகிய பதவிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பிரதமர் அலுவலகம் ஊடாகவே நிதி அமைச்சிக்கு இதற்கான பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  மேலும், பிரதமரால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவரான தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சின் திட்ட செயலாளர் சாந்த பண்டாரவினால் இந்த தொழில்வாய்ப்பு தொடர்பான விவரங்கள் வேலைவாய்ப்பு பட்டதாரிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts:


இலங்கை நிதி புலனாய்வுப் பிரிவு - உள்நாட்டு இறைவரி திணைக்களம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
நீர் மற்றும் மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு பொது பயன்பாட்டு ஆணை...
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரி...