படைவீரர்களுக்கான விருசர சலுகை அட்டை இன்று!

Friday, December 9th, 2016

படைவீரர் நலனுக்கான விருசர சலுகை அட்டைகளை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று கம்பஹாவில் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வு கணேமுல்ல கமாண்டோ படையணியின் மத்திய நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வருடம் ஜனவரி மாதம் விருசர சலுகை அட்டைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் சலுகை அட்டைகளைப் பெற்றுள்ளனர்.

போர்க்களத்தில் அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட கம்பஹா மாவட்ட முப்படை வீரர்கள், சிவில் பாதுகாப்பு அங்கத்தவர்களுக்கு இந்த விருசர அட்டை வழங்கப்படவுள்ளது.போர்களத்தில் உயிர் நீத்த படைவீரர்களின் சார்பில் விருசர அட்டைகளை குடும்பத்தவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

இன்று ஆரம்பமாகவுள்ள இத்திட்டத்தில் ஆயிரத்து 800 அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. படைவீரர்களின் குடும்பங்களுக்கு காணிகளும், அவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

0db3d841012f4a570513cfff8327aa6d_XL

Related posts: