படையினர் வசம் உள்ள காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு!

Tuesday, December 19th, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கு தேவையான அளவு காணிகளை பெற்றுக்கொண்ட பின்னர் பொதுமக்களின்காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்தெரிவித்துள்ளார்.

தற்போது தேவையான காணிகளை அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கேப்பாப்புலவு பிரதேசத்தில் 158 ஏக்கர்நிலத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த காணிகளை எதிர்வரும் 28ஆம் திகதி பொதுமக்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவில் மீள்குடியேற்றத்திற்காக 168 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு இந்தியாவின் வீட்டுத்திட்ட அடிப்படையின் கீழ் 12 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளை வழங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: