படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- இராணுவத்தளபதி உறுதி!

Saturday, December 23rd, 2017

யாழ்ப்பாணத்தில் படையினரிடமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம்உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத்தளபதி யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதுகாணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான பதில் தருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் யாழில் படையினரின் வசமுள்ள காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக அரசாங்க அதிபர் இராணுவத்தளபதிக்கு நன்றிதெரிவித்துள்ளார். பல காணிகள் படையினரின் வசமுள்ள பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலை கட்டடங்கள் ஆகியவற்றையும் விரைவில் விடுவித்து மீள்குடியேற்றத்தைதுரிதப்படுத்துமாறும் அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனடிப்படையில் இவ்விடயம் தொடர்பில் தாம் சாதகமான பதில் ஒன்றை வழங்குவதாக இராணுவத்தளபதிஉறுதி அளித்துள்ளார்.

Related posts: