படையினரது முயற்சியால் காப்பாற்றப்பட்ட பொன்னாலைக் காடு!

பொன்னாலை மேற்கில் பெருமளவான பிரதேசம் சிறிய காடுகளால் சூழப்பட்டிருக்கின்றது. குறித்த பகுதியிலுள்ள பற்றைக் காட்டுப் பகுதியை விசமிகள் சிலர் தீ மூட்டியால் காட்டிலுள்ள பெருமளவான பற்றைகளும் செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்றையதினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது –
குறித்த காடு தீப்பற்றி எரிந்ததை அறிந்த கடற்படையினர் உடனடியாக விரைந்து செயற்பட்டு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் காட்டில் உள்ள பனைகள், மரங்கள் மற்றும் பற்றைகளுக்கு விசமிகள் அடிக்கடி தீவைப்பதால் பெருமளவான பற்றைகளும் வடலிகளும் பனை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது..
இந்த நிலையில், இன்று மதியம் இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்தக் காட்டுக்கு தீமூட்டியதால், காய்ந்திருந்த புற்றரைகள் ஊடாக வேகமாக பரவிய தீயின் காரணமாக பல ஏக்கர் கணக்கான பற்றைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
பற்றைகள் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த கடற்படையினர் துரிதகதியில் செயற்பட்டு அணைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். சம்பில்துறையில் உள்ள கடற்படை முகாமில் இருந்து பேருந்து ஒன்றில் ஏற்றி வரப்பட்ட ஐம்பதுக்கும் அதிகமான கடற்படையினர் தண்ணீரைப் பீச்சியடித்ததுடன் புற்றரைகளினூடாக பரவிய தீயை குழைகளால் அடித்து அணைத்தள்ளதாகவும் இரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|