பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலை மாணர்கள் கைது!

Friday, May 6th, 2016
பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த மாணவர்கள் அவர் அவர் வசிக்கும் பிரதேசங்களில் வைத்தே கைது செய்யப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனிப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவியர் மற்றும் ஒரு மாணவன் ஆகியோர் கிரிபத்கொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழக மாணவர் மாபியாக்களின் சட்டதிட்டங்களின் பிரகாரம் முதலாம் ஆண்டு மாணவிகள் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு நீண்ட காற்சட்டை அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்து அறியாத நிலையில் மாணவியொருவர் நீண்ட காற்சட்டை அணிந்து பல்கலைக்கழகம் வந்திருந்த நிலையில் நான்கு மாணவியரும் ஒரு மாணவரும் இணைந்து குறித்த மாணவியை கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்த பகிடிவதைக்குள்ளாக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கிரிபத்கொடை பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: