நொதேர்ண் பவர் வழக்கு ஒத்திவைப்பு!

Friday, December 2nd, 2016

சுன்னாகத்தில் உள்ள நொதேர்ண் பவர் மின்உற்பத்தி நிலையத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியெறிய கழிவு எண்ணெய் சுன்னாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீருடன் கலந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன் மின் உற்பத்தி நிலையத்தை மூடுமாறு கோரி வழக்குகளும் தாக்கல் செய்ய்பட்டன. உயர் நீதிமன்றில் பொதுமக்கள் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு எதிர் வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்று, யாழ்.மேல் நீதிமன்று, கொழும்பு மேன் முறையீட்டு மேல்நீதிமன்று, உயர் நீதிமன்று என்பனவற்றில் தாக்கலாகியுள்ளன. மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த மின் உற்பத்தி நிலையத்தைத் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்தமின் நிலையம் மூடப்பட்டது. சில மாதற்களுக்கு பின்னர் அந்தமின் நிலையத்தை மிளத் திறக்க அனுமதிக்குமாறு கோரிp யாழ்.மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனைப் பரிசீலித்த மேன்நீதிமன்று, குறித்த மின் நிலையத்தைத் திறந்து பராமரிக்க மாத்திலம் அனுமதி வழங்குவதாகவும், மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டிருந்தது, அதனால் குறித்த மின்உற்பத்தி நிலையத்தில் இன்றுவரை மின் உற்பத்தி இடம்பெறுவதில்லை.

1425549597Natn-600x396

Related posts: