நேபாள புதிய பிரதமருக்கு பிரதமர் ரணில் வாழ்த்து!

Saturday, August 6th, 2016

நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்பா கமால் தகல் தெரிவுசெய்யப்பட்டுள்ளமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அத்துடன் நேபாளத்தின் வளர்ச்சிப் பணிகளை நம்பிக்கையுடன் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள நேபாளத்தின் புதிய பிரதமர், இனிவரும் காலங்களில் இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகள் சிறப்பாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts: