நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை!
Friday, July 28th, 2017நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியங்களில் உள்ள நெல்லை அரிசியாக்கி உடனடியாக சந்தைக்கு வழங்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியூத்தீன் கூட்டுறவு மொத்த வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வாழ்க்கைச் செலவின குழுக்கூட்டத்தின்போது அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கினார். சந்தையில் அரிசித் தட்டுபாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் 55 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் காணப்படுகிறது. மேலும் 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் மியன்மாரில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
டெங்கு நோயின் தாக்கம் வீழ்ச்சி!
நாளைமுதல் வழமைக்கு திரும்பும் கொழும்பு - மேல் மாகாணத்தை விட்டு வெளியேற அனுமதி - கொரோனா பரவலை தடுக்கு...
இன்று மின்வெட்டு இல்லை - எனினும் கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டினால் மின்தடை ஏற்படலாம் - பொது...
|
|