நெற்செய்கை அழிவால் விவசாயிகள் பாதிப்பு!

Saturday, December 9th, 2017

வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச கமநல சேவைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நெற் செய்கையில் 67 வீதம் அழிவடைந்துள்ளது.

இவ்வாறு அழிவடைந்த நெற் செய்கைக்கு மீள்நடுகை செய்வதற்கும் போதிய நெற் பயிர் இன்மை காரணமாக விவசாயிகளுக்குப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதனால் நவாலி, ஆனைக்கோட்டை, கட்டுடை, பண்டத்தரிப்பு மற்றும் இந்த பிரதேச விவசாயிகள் பெருநஸ்டம் அடைந்துள்ளனர்.

பெரும்போக நெற் செய்கைக்கு நிலம் உழுது, பண்படுத்தி, விதை நெல் கொள்வனவு தொடக்கம் களைநாசினிக்கு மருந்துகள் தெளித்த நிலையில் விவசாயிகள் பெருநஸ்டம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: