நெதர்லாந்து தூதுவர் – கடற்படை தளபதி சந்திப்பு!
Saturday, October 14th, 2017
இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் ஜோஆன் டூன்வர்ட் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கடற்படை தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இருநாட்டு கடற்படைகள் இடையில் இருக்கும் பரஸ்பர நட்பினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும் இந்தியப் பெருங்கடல் சுற்றி பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதிகள் வழங்குவதற்காக இலங்கை கடற்படை தயாராக இருப்பதை பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.இந்த நிகழ்வினை நினைவு கூறும்வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
Related posts:
தனிமைப்படுத்தல் முகாம்களில் 8 பேருக்கு மலேரியா - வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவிப்பு!
சுகாதார நடைமுறைகளை மீறி பூசை வழிபாடு – வடமராட்சியில் சீல் வைக்கப்பட்டது ஆலயம்!
வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளி மாற்றியமைக்கப்பட வேண்டும் - மூத்த...
|
|