நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 2 பேர் கைது!

Thursday, July 5th, 2018

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  இரு படகுகள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 2 மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த கடற்படைப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே இன்று 05 அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 2 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படையினர் தடுத்து வைத்திருப்பதுடன், கைதுசெய்யப்பட்ட 2 மீனவர்களையும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

இவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts:

மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் - இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்...
சுதந்திர தினத்தை கொண்டாடுவது அவசியம் - இல்லையெனில் சுதந்திரத்தை கூட நாம் கொண்டாட முடியாதவர்கள் என உல...
நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ர...