நெடுந்தீவுக் கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கைது 

Tuesday, July 25th, 2017
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் நேற்றுத் திங்கட்கிழமை(24) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து இரு மீன்பிடிப் படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மீனவர்கள் மூவரும் இன்றைய தினம் கடற்படையினரால் யாழ். கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: