நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டுத் தமிழக மீனவர்கள் நேற்று (19) அதிகாலை யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு விசைப்படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும் நேற்றுப் பிற்பகல் கடற்படையினரால் யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும்-25 ஆம் திகதி வரை குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வாக்களிப்பு காலத்தில் அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படகூடாது - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்...
இலங்கையை சர்வதேச சதிக்குள் சிக்க வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி - நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
விமான நிலையங்களின் செயற்பாட்டை தடையின்றி முன்னெடுங்கள்! - விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி...
|
|