நெடுந்தாரகை கட்டுமானம் டிசம்பர் 22 நிறைவடையும் – வடக்கு மாகாண தலமைச் செயலாளர் பத்திநாதன்!

Saturday, November 19th, 2016
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடுவதற்காகப் புதிதாக கட்டப்படும் நெடுந்தாரகைப் படகின் பணி டிசம்பர் 22அம் திகதி முடிவடையம் என்று  அந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள டொக்கியாட் நிறுவனம் அறிவித்துள்ளதாக, வடக்கு மாகாண தலமைச் செயலாளர் பத்திநாதன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடுவதற்காகப் புதிதாக கட்டப்படும் நெடுந்தாரகைப் படகை நேற்றுமுன்தினம், வடக்கு மாகாண தலைமைச் செயலர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். நெடுந்தீவு மக்களுக்காக  தற்போதுள்ள வடதாரகைக்கு மேலதிகமாக புதிய படகை அமைக்கும் பணியும் இடம்பெறுகின்றது. இதற்காக 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அந்தப் பணி  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புதிய படகு 80 ஆசன வசதிகளைக் கொண்டது. புதிய படகும் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தனது சேவையை ஆரம்பிக்கும் பட்சத்தில் நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

neduntheevu-300x225

Related posts: