நெடுங்கேணிப் பொதுச் சந்தைக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை!

Tuesday, November 1st, 2016

நெடுங்கேணி பொதுச்சந்தையில் நீண்ட காலமாக பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி மின்குமிழ் சீராக ஒளிராமல் உள்ளது. அதனால் திருடர்கள், யானைகளில் அட்டகாசத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. உடனடியாக மின்சார இணைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நெடுங்கேணி பொதுச் சந்தைக்கு சூரிய ஒளியில் ஒளிரும் மின்குமிழே பொருத்தப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய காலநிலை காணப்படின் இரவு 7 மணிக்கே மின்குமிழ் அணைந்து விடுகின்றது. அதைப் பயன்படுத்தி சந்தைப் பகுதிக்குள் திருடர்கள் கைவரிசையைக் காட்ட முற்படுகின்றனர். நெடுங்கேணிப் பகுதிகளில் இரவு வேளைகளில் உள்நுழையும் காட்டு யானைகள் சந்தைக்குள் வருகின்றன. வியாபாரத்திற்கு வைத்திருக்கும் மரக்கறிகளை அழிக்கின்றன. சந்தை கட்டடத் தொகுதிக்கும் சேதங்களை விளைவிக்கின்றன. சந்தைப்பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி மின்குமிழ் அணைந்து விடுவதே இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. சந்தை அமைந்துள்ள பகுதிக்கு மின்சார இணைப்பு ஏற்படுத்தி தரும்படி நெடுங்கேணி பிரதேச சபையினரிடம் கோரிக்கை விடுத்தபோதும் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. – என சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

இரண்டு சூரிய ஒளி மின்குமிழ்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. தற்போத மழை காலம் என்பதால் அவை நேரத்துடன் அணைந்து விடுகின்றன. மின் இணைப்ப வழங்குவதற்கு அனுமதி கோரப்பட்டிருக்கின்றது. விரைவில் பொருத்தப்படும் – என்று நெடுங்கேணி பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

July232015

Related posts: