நெஞ்சுவலியால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வழமை போன்று உணவை உட்கொண்டு விட்டு உறக்கத்திற்குச் சென்ற 54 வயதான குடும்பஸ்தர் மறுநாள் அதிகாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(01) அதிகாலை யாழ். ஆனைக் கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவருவதாவது,
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூலி வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் பிள்ளைகளுடன் சேர்ந்து ஒன்றாக உணவு உட்க்கொண்ட பின் வழமை போன்று உறங்கியுள்ளார். மறுநாளான நேற்றுப் புதன்கிழமை அதிகாலை மேற்படி குடும்பஸ்தரின் மனைவி அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய போது அவர் எந்தவித அசைவுமின்றி இருந்துள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த குடும்பஸ்தரின் உடற்கூற்றுப் பரிசோதனையில் குறித்த நபருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியே இறப்பிற்கான காரணம் என்ற உண்மை தெரியவந்துள்ளது.
Related posts:
|
|