நூலக சேவை அலுவலர் தடை தாண்டல் பரீட்சை!
Tuesday, July 17th, 2018
இலங்கை அரசாங்க நூலக சேவையின் 2,3 ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இப் பரீட்சைக்கு இணைந்த சேவைக்குரிய அலுவலர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். இவ்வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்தப்படும் மேற்படி பரீட்சைக்கு முதல் தடவையாகத் தோற்றும் அலுவலர்களைத் தவிர ஏனையோர் ஒரு பாடத்திற்கு 250 ரூபாவும் இரண்டு பாடங்களாயின் 500 ரூபாவும் பரீட்சைக் கட்டணமாக செலுத்துதல் வேண்டும். மாகாண அரச சேவை நூலகர்களுக்கு உரிய மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினாலும் ஏனைய நிறுவனங்களின் விண்ணப்பதாரிகளுக்கான ஏற்பாடுகள் அந்தந்த நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்படும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் தத்தமது நிறுவனத் தலைவர்களினூடாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டு பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் த.பெ.இல. 1503 கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Related posts:
|
|