நுண்கடனால் 200 பெண்கள் விபரீத முடிவு- வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

Wednesday, February 10th, 2021

தமது அவசர தேவைக்கென நுண்கடனை பெற்றுக்கொண்ட நிலையில் அதனை மீளவும் செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிங்கள தொலைக்காட்சி யூடியூப் வலைத்தளத்தின் ஊடாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அத்துடன் நுண்கடனை செலுத்த முடியாத பெண்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் பாலியல் இலஞ்சமும் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுண்கடன் திட்டத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மேலும், மலையகத்திலுள்ள பெண்களும் இதே நுண்கடன் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக பிரபல திரைப்பட நடிகையான நிரஞ்ஜனி சண்முகராஜா தெரிவித்தள்மையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: