நுகர்வோர் நலனுக்காக தொலைபேசி இலக்கங்கள்!
Thursday, July 21st, 2016நுகர்வோர் அதிகார சபையில் முறைபாடுகளை தெரிவிப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையால் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றல், காலாவதியான பொருட்களை விற்றல் உள்ளிட்ட முறைபாடுகளுக்ககாக இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 011-7755481,755482,755483 என்ற இலக்கங்களுக்கு அல்லது 076 6670670 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தமது முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வாரம் 16 அத்தியாவசிப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை அரசாங்கம் அறிவித்திருந்ததுடன், குறித்த நிர்ணய விலைகளுக்கு அதகமாக பொருட்கள் விற்கப்படுவதாக முறைபாடுகள் கிடைத்து வருவதால் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் வேலைத்திட்டத்தையும் நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த சனிக்கிழமை இவ்வாறு 650 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாகவும், அதில் 325 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
|
|