நீர் நிலைகளில் உள்ள  வெடிபொருட்களை அகற்ற வருகிறது அமெரிக்க கடற்படையின் ரோபோ!

Tuesday, April 26th, 2016
இலங்கையில் யுத்தகாலத்தில் நீர்நிலைகளில் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கு அமெரிக்க கடற்படையின் ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீர்நிலைகளில் உள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கு அமெரிக்க கடற்படையின் விசேட பயிற்சிபெற்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அமெரிக்க கடற்படையின் விசேட குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்து நீர்நிலைகளில் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பாக விசேட பயிற்சிகளை வழங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த பயிற்சி நடவடிக்கைகள் சுமார் ஒருவாரகாலமாக இலங்கையில் இடம்பெற்றது.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு ஒன்று அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டது.
குறித்த குழுவினர் நீர்நிலைகளில் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பான விசேட பயற்சிகளில் ஈடுபட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் பயற்சி பெற்ற இலங்கை கடற்படை அதிகாரிகள் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுடன் இணைந்து வடக்கில் நீர்நிலைகளில் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts: