நீர் கட்டணத்தை அதிகரிக்க முடிவு?

நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை பொருளாதார முகாமைத்துவக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பரிந்துரைக்கமையவே நீர்க்கட்டண அதிகரிப்பு யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வசந்த ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் 2012 இற்கு பின்னர் நீர்ப் பட்டியலுக்கான கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆனால் நீரை சுத்திகரித்து பகிர்;ந்தளிப்பதற்குத் தேவையான அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பொருளாதார முகாமைத்துவ குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு கிடைக்கும் அனுமதிக்கமையவே நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை நீர்க்கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படாமையினால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|