நீர்கொழும்பின் பதற்ற நிலைமை தற்போது தணிந்துள்ளது – பொலிஸார்!

Monday, May 6th, 2019

நீர்கொழும்பில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவுமுதல் இன்று காலை 7 மணி வரை அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் சாதாரணமாக மக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் மீண்டும் இன்று ஆரம்பமாகின்றன. எனினும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஆனாலும் அலுவலகம் செல்வோர் வழமை போன்று செல்கின்றனர். போக்குவரத்து சேவைகள் சீராக இடம்பெறுகின்றன.

நிலைமை சுமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனே இருப்பதாக தெரிய வருகிறது.

நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் நேற்று மாலை இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை பெரும் வன்முறையாக மாறியிருந்தது.

இதனையடுத்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன. வீடுகள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், நேற்றிரவு பல முஸ்லிம் மக்கள் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் ஏற்பட்ட பகுதிகளில் முப்படையினரும் தீவிர பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: