நீருக்கான கட்டண உயர்வு இடைநிறுத்ப்பட்டது!

Tuesday, November 15th, 2016

நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீர் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னதாக தெரிவித்திருந்தது.  இந்தநிலையில் குறித்த கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆராய குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாகவும், சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

no-water-415x260

Related posts: