நீரில் மூழ்கி யாழில் இருவர் உயிரிழப்பு!

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் கடல் மற்றும் குளத்தில் நீராடிய ஒன்பது வயதுச் சிறுவனொருவனும், ஆசிரியரொருவரும் உயிரிழந்துள்ளனர்.
மாதகல் இளவாலைத் துறைப் பகுதியில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்த சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஆசிரியரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவர் யாழ்.இளவாலை சென். ஹென்றீஸ் பாடசாலையின் ஆசிரியராவார்.
யாழ்.கந்தரோடைப் பகுதியிலுள்ள பினாக்காய்க் குளத்தில் நேற்று மாலை மூன்று சிறுவர்களுடன் நீராடச் சென்ற அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயதான பரமேஸ்வரன் சாருஜன் என்ற சிறுவனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். மேற்படி இரு உயிரிழப்புக்களும் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர்!
வடக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் 72 ஆயிரத்து 994 பேர் பாதிப்பு!
இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை - மின் கட்டண அதிகரிப்பு குறித்து அவதானம் என பொதுப...
|
|