நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

Monday, April 4th, 2016

லிந்துலை டீமலை ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இச் சம்பவம்  03.04.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.

இவர் தனது நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென காணாமல் போயுள்ளதாக அப்பிரதேசத்தில் இருந்த பிரதேசவாசிகள் லிந்துலை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் பின் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுப்பட்ட பொதுமக்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவா் தேவசகாயம் தாவீதுராஜா (வயது 11) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

Related posts: