நீதிமன்ற நடவடிக்கைகள் குறைப்பு !

Saturday, May 1st, 2021

நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிமுதல் 7 ஆம் திகதிவரை நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

குறித்த தகவலை நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தினங்களில் சந்தேகநபர்கள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய அவசியிமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: