நீதிமன்றத்திற்கு அழுத்தம் காடுக்க அரசுக்கு எந்தத் தேவையும் இல்லை சுகாதார அமைச்சர் ராஜித!

Monday, February 6th, 2017

நீதிமன்றம்  சுயாதீனமானச் செயற்பட்டு வருகின்றது. அதற்கு அழுத்தம் கொடுக்க அரசுக்கு எந்தத் தேவையும் இல்லை சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை அரசாங்கம் அவ்வாநானதொரு நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொய்ப் பிரசாரம் பரவியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை,

ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் தாமதித்து வருகின்றமை தொடர்பில் பிரச்சினையுளளது. விசேடமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மிக் விமானக் கொடுப்பனவு, டுபாய் வங்கி வைப்புக்கள், ரகர் வீரர் கொலை உட்பட பெரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சிறு பிரச்சினைகள் பற்றி மட்டும் விசாரணைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து நல்லாட்சி அரசைப் பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடமுள்ளது. சல அதிகாரிகள் முறையாகச் செயற்படாது உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எம்மால் முடியாதுள்ளது. எது எவ்வாறிருப்பினும் விரைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. என்றார்.

rajitha-720x480

Related posts: