நீண்டகாலமாக சேவையாற்றிய ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் முன் போராட முடிவு!

ஒன்பது மாதங்களாகியும் ஆசிரியர் பயிற்சி கலாசாலை இறுதிப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படாமையால் தாங்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படவில்லை அதனால் தங்களுக்கு மிக குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருகின்றன.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களமும் கல்வி அமைச்சும் வேண்டுமென்றே தங்களது பெறுபேறுகளை வெளியிடாமல் காலங்கடத்தி வருவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கவலை தெரிவித்துள்ளனர்.
தங்களது பரீட்சைப் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட்டு அனைவரையும் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்த்து சம்பள நிலுவை கொடுப்பனவுகளையும் தமக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு 01.07.2013 ஆம் திகதியிலிருந்து வழங்குமாறு கோரியுள்ளார்கள்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடப்படாமையால் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாதமையால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் தங்களது பரீட்சைப் பெறுபேறுகளை
காலம் தாழ்த்தாது விரைவாக வெளியிட்டு தங்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்கக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கு கோரிக்கைக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.எனினும் தங்களுக்கான எந்தவொரு பதிலும் இதுவரை தரப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் வன்னிப் பகுதிகளில் யுத்த காலம் உட்பட நீண்ட காலமாகச் சேவையாற்றிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை 9மாதங்களாகியும் வெளியிடாமல் பழிவாங்காதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
மேலும் பெறுபேறுகளை விரைவாக வெளியிட்டு இலங்கை ஆசிரியர் சேவைக்குள் 01.07.2013 ஆம் திகதியிலிருந்து உள்ளீர்ப்புச் செய்து தமக்கான சம்பள நிலுவைகளையும் அக்காலப் பகுதியிலிருந்து வழங்கி உதவ வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, பெறுபேறுகளை வெளியிடாமல் காலங்கடத்தப்படுமாகவிருந்தால் அனைவரும் ஒன்று சேர்ந்து வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு முன் போராட்டம் நடத்தவுள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|