நீண்டகாலத்திற்குப் பின் விலங்கன்கலட்டி வீதி புனரமைப்பு!

யாழ். வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட குப்பிளான் தெற்கு விலங்கன்கலட்டி வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
குறித்த வீதி நீண்டகாலமாகத் திருத்தப்படாதிருந்த காரணத்தால் இந்த வீதியால் தினமும் போக்குவரத்துச் செய்து வந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள், மாணவர்கள், முதியோர்கள், பெண்கள் , சிறுவர்கள் உள்ளிட்ட தரப்பினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில் குறித்த வீதியின் நிலைமை தொடர்பில் வலி. தெற்குப் பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்துச் சபை நிதியில் 660 மீற்றர் நீளமான மேற்படி வீதியின் புனரமைப்பு வேலைகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது நிறைவடைந்துள்ளது.
வீதி புனரமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
Related posts:
குடாநாட்டில் டெங்கு தீவிரம்!
இரு பிள்ளைகளின் தாய் உயிரிழந்த நிலையில் மீட்பு வட்டக்கச்சியில் சம்பவம்!
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டம் – இலங்கை - இந்திய எல்லை வரை ச...
|
|
போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்த நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதானமாக செயற்பட ...
ஜனாதிபதி தலைமையில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு – பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ...