நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை!

Monday, July 25th, 2016

அரச பொருளாதார மத்திய நிலையங்களில் சுமார் 7 பொருட்கள் நிர்ணய விலையில் விற்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய திட்டத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கே அரச பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுகின்றது. எனினும் இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் கண்காணிப்பதில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தவறான முறையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க சம்பிக்க பிரேமதாசா குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்யாதவர்கள் தொடர்பில் கண்காணிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: