நிரந்தர வைத்தியர்களின்றி வைத்திய தேவைகளை பெறுவதற்கு அவதியுறும் நோயாளர்!
Sunday, July 22nd, 2018கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியசாலை பிரமந்தனாறு ஆரம்ப மருத்துவமனை என்பவற்றுக்கு இதுவரை நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றது.
குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் 24 மணி நேரமும் சேவை வழங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை மற்றும் பிரமந்தனாறு ஆரம்ப மருத்துவமனை என்பவற்றுக்கு இதுவரை நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு வைத்தியர்கள் நியமிக்கப்படாத நிலையில் இந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது வைத்திய தேவைகளை நிறைவு செய்வதில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறித்த வைத்தியசாலைகளிலும் வார நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் நடமாடும் மருத்துவ சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன என்றும் மேற்படி வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|