நிரந்தர வைத்தியரின்றி இயங்கும் வைத்தியசாலையால் மக்கள் அவதி!

Wednesday, December 7th, 2016

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பணியில் உள்ள மருத்துவர் திங்கள் தொடக்கம் வெள்ளிவரை பணியில் இருப்பதாகவும் சனி, ஞாயிறு தினங்களில் மருத்துவர் பணியில் இல்லாமையால் நோயாளர்கள் பெரும் சிரமமடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாந்தை கிழக்கில் வசிக்கும் 3000 வரையான குடும்பங்களின் உயிர் நாடியான இவ் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமியுங்கள் என மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் இதுவரை நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படாததன் காரணமாக மிகவும் பின் தங்கிய பகுதியான மாந்தைகிழக்கு மக்கள் பெரும் மருத்துவ நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். குறித்த மனிதாபிமான விடயத்தை கருத்தில் கொண்டு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு மருத்துவர் ஒருவரை நிரந்தரமாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

jaffna-hospital-out2