நிரந்தர நியமனம் கோரி சமூக சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து , வடமாகாண சபையின் முன்பாக இன்று (26) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்ற வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாதாந்த அமர்விற்காக அங்கு வந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் தான் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தமையினால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 350 தொண்டர்கள் நிரந்தர நியமனம் இல்லாமல் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
மேலும் 15 வருடங்களாக கடமையாற்றும் தொண்டர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய அரசாங்கம் 1,000 பேருக்கான நியமனம் வழங்கினால் தமக்கான நியமனம் வழங்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|