நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயுடன் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச்சு!

Saturday, October 1st, 2016

நியூசிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ ஆகியோரிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் பிரதமரை நியூசிலாந்து பிரதமர் வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஒக்லண்டிலுள்ள அரச இல்லத்தில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

நியூசிலாந்தின் பாரம்பரிய ஹகா நடனத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்த நாட்டின் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.அதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் பின்னர் இரண்டு பிரதமர்களும் கூட்டாக ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இலங்கையின் விவசாய, விளையாட்டு மற்றும் கல்வித் துறைகளில் பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு நியூசிலாந்து பிரதமர் இணங்கியுள்ளார்.

குறிப்பாக கால்நடை உற்பத்தித் துறையின் அபிவிருத்திக்காக அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு பிரதமர் ஜோன் கீ இதன்போது விரும்பம் தெரிவித்துள்ளார்.அத்துடன் விளையாட்டுத் துறையில், இலங்கையை தெற்காசியாவின் றக்பி விளையாட்டிற்கான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையமாக மாற்றுவதற்கும், இந்த நாட்டு இளைஞர்களுக்கு நியூசிலாந்தில் அதிக கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கும் அந்நாட்டு பிரதமர் இணங்கியுள்ளார்.

இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவூட்டும் வகையில், நாடுகளுக்கு இடையில் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களை ஸ்தாபிக்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ ஆகியோரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.நியூசிலாந்தின் ஒக்லேண்டில் வாழும் இலங்கை சமூகத்தினரை இன்று மாலை பிரதமர் சந்திக்கவுள்ளதுடன், அங்குள்ள மிருகக்காட்சி சாலையையும் பார்வையிடவுள்ளார்.

mets

Related posts: