நியாய விலையில் தேங்காய் !
Monday, December 18th, 2017நியாயமான விலையில் தேங்காயை விநியோகிக்கும் அரசின் வேலைத் இன்றுமுதல்18) ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப வைபவம் அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில், பத்தரமுல்லை தெங்கு உற்பத்தி சபையின் கட்டிட வளவில் நடத்தப்படவுள்ளது.
தேங்காய்க்கு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையில் 75 ரூபாவுக்கு மேலதிகமாக தேங்காயை விற்பனை செய்ய முடியாது என தெங்கு உற்பத்தி சபையின் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுமென்று நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மொத்த விலையில் தேங்காய் தற்போது 40 ரூபாவுக்கும் 45 ரூபாவுக்கும் இடையில் காணப்படுகிறது.
வர்த்தகர்கள் கூடுதலான இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தேங்காயின் விலையை அதிகரித்துள்ளனர். தேங்காய்க்கான தட்டுப்பாடு நீங்கம் வரையில் தெங்குத் தொழிலுக்காக மாத்திரம் கொப்பராவை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேங்காய் பால் தயாரிப்பாளர்களுக்கும் இதனுடன் தொடர்புடைய தொழில் துறையினருக்கும் இறக்குமதி வரி இன்றி அவற்றை இறக்குமதி செய்து கொள்ள முடியும். கொப்பராவை உடனடியாக துறைமுகத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் வகையில் தேவையான அனுமதியை வழங்கவும் ஆலோசனை சுங்கப் பகுதியினருக்கு வழங்கப்பட்டுள்ளது
Related posts:
|
|