நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கை – ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!
Thursday, March 18th, 2021புகையிரத எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புகையிரத எஞ்சின் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு எதிரான நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடப்பட்ட நிலையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கிடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வருமானத்தை விட அதிக நிதி நோயை குணப்படுத்த செலவாகிறது - சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த!
பொலிஸாரினால் இளைஞன் சுட்டுக்கொலை! ?
டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் - டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|