நியமனம் பெற்று 4 மாதத்துக்குள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்!

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று, ஆசிரியர்களாக அண்மையில் புதிதாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 4 மாத காலத்துக்குள் 800 பேர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக இலங்கை ஆசியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் புதிதாக சுமார் 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களே தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். புதிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கியுள்ளதனால், பல வருடங்களாக தூர இடங்களில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் பெறமுடியாதுள்ளதாகவும், அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
யாழ்.நகர் அபிவிருத்தி: வடக்கின் முதல்வர் தலைமையில் புறக்கணிப்பு!
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் - இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!
தேர்தல்கள் பிற்போடப்படுமென எதிரணியினர் கற்பனையில் பிரசாரம் செய்கின்றனர் - நீதி அமைச்சர் விஜயதாச ரா...
|
|