நிதியமைச்சர் உள்ளிட்ட 14 பேருக்கு மீண்டும் நீதிமன்று அழைப்பாணை!
Wednesday, October 12th, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 14 பேரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மனுவில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சுங்க பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பியர் நிறுவனமொன்றின் வரி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடியில் அரசாங்கத்துக்கு 6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த மனுவினை சிங்கள தேசிய முன்னணி மற்றும் ஆறு கட்சிகள் இணைந்து தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முட்டையின் விலை வீழ்ச்சி!
இறுக்கமான பயணக் கட்டுப்பாடு - யாழ்ப்பாணத்தில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் : இருவர் படுகாயம்!
தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் - சுற்றுலா முகவர் நி...
|
|