நிக்கவரெட்டிய நில நடுக்கத்தால் குழப்பத்தில் மக்கள்!
Friday, September 30th, 2016
நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 9 – 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில நடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது வீடுகளில் இருந்து பொருட்கள் ஆடியதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடுமையான வரட்சி காலநிலை காணப்படுகின்ற நிலைமையினால் இவ்வாறான நில நடுக்கம் உணரப்பட்டதாக அல்லது வேறு சம்பவங்களினால் உணர்ப்பட்டதா என்பது தொடர்பில் அந்த பகுதி மக்கள் சந்தேகத்தில் உள்ளனர்.
இது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலியிலும் இவ்வாறு நில நடுக்கம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|