நாவாந்துறையில் பட்டப் பகலில் வீடுடைத்துப் பெறுமதியான நகை, பணம் திருட்டு!

Friday, July 22nd, 2016

யாழ்ப்பாணம் நாவாந்துறை கண்ணாபுரம் பகுதியில் வீட்டிலுள்ள அனைவரும் தொழில் நிமித்தம் வெளியில் சென்ற போது ஆசிரியரொருவரின் வீடொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளன.

நேற்று (21) பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  வீட்டு உரிமையாளர் மதிய வேளை  வீட்டுக்குள் சென்று பார்த்த போது அலுமாரி கிளறப்பட்டிருந்ததுடன் பணமும் நகையும் திருடப்பட்டமையும் தெரிய  வந்துள்ளது. இதன் போது பெறுமதியான பவுண் காப்புடன், 10 ஆயிரம் ரூபா பணமும்  திருடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Related posts: