நாளைமுதல் 18 ஆம் திகதிவரை கடும் மழை பெய்யும்! – வளிமண்டல திணைக்களம்!

நாளை முதல் 18 ஆம் திகதி வரை நாடு முழுவதும் கடும் காற்றுடன் மழை பெய்யும் காலநிலை உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹெளியகொட, அயகம மற்றும் பலங்கொடை ஆகிய பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
மேலும் ஹெட்டன் கொழும்பு பிரதான பாதையில் தற்போது அதிக பனிமூட்டம் காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு காவற்துறை கோரியுள்ளது.
Related posts:
வாள்வெட்டு குழுவை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி!
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் - ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவி...
|
|