நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பிரதமரின் தலைமையில் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

Saturday, February 13th, 2021

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமரின் தலைமையில் இன்று அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1980 மற்றும் 1982 ஆண்டுக்கு அடைப்பட்ட காலப்பகுதியில்  தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களில் 10 வருடங்களுக்கும் குறைவான சேவைக் காலத்தையுடைய ஊழியர்களுக்கு, அவர்களது வாழ்நாள் முழுவதும் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு பெற உரிமை உண்டு.

இந்த மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்;கைக்கு அமைய குறியீட்டு ரீதியாக, சில ஊழியர்களுக்கே பிரதமரினால் காசோலைகள் இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.

2020 ஜுலை 15ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட முடிவிற்கமைய, இந்த மாதாந்த கொடுப்பனவை வழங்க பொது திறைசேரியிலிருந்து புடவை கைத்தொழில் திணைக்களத்திற்கு ரூ .95 மில்லியன் விடுவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், தான் தொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியிலிருந்து அவதானம் செலுத்திவந்த ஒரு பிரச்சினைக்கு இவ்வாறு தீர்வு பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts:


போக்குவரத்து சேவையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தாருங்கள்- வடக்கு மாகாண ஜனநாயக போக்குவரத்த...
அன்று அரசியலுரிமை வேண்டும் என்ற சுமந்திரன் இன்று இயலாமையால் புலம்புகிறார் - பருத்தித்துறை பிரதேச சப...
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !