நாய் கடிக்கு உள்ளாகி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
Sunday, December 11th, 2016
நாய் கடிக்கு உள்ளான பெண், ஒரு மாதத்துக்குப் பின்னர், சிகிச்சை பலனின்றி யாழ். போனா வைத்தியசாலையில் நேற்றையதினம் (10) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை அல்வாய் பகுதியினை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான தர்மபாலன் ரதிமலர் வயது(55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், தனது வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்ற போது தெருவில் நின்ற நாய் கடித்து குதறியதில் அவரது விரல் ஒன்று துண்டிக்கப்பட்டது.
உடனடியாக, பருத்தித்துறை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியர், அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு தெரியப்படுத்தி, நாயின் தலையினை துண்டித்து எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
“பசியின் காரணமாகவே நாய் கடித்துள்ளதுடன். விசர் தொற்று இருப்பதாக தெரியவில்லை” என சுகாதார வைத்திய அதிகாரிக்கு, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். அதனையடுத்து, இரண்டு நாட்கள் சிகிச்சைப் பெற்ற பெண், வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, அவர் மீண்டும் பருத்தித்துறை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர், மேலதி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்த நாயானது, இதுவரை ஜந்து நபர்களை கடித்து குதறியுள்ள நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் நாயை இன்று(11) அடித்து கொன்றுள்ளனர்.
Related posts:
|
|