நாய்களை வீதிகளில் கைவிட்டுச் சென்றால் 25,000 ரூபா அபராதம் !

Saturday, February 18th, 2017

சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் நபரொருவருக்கு 7 நாய்கள் வீதம் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களும் உள்ளடக்கப்படுவதுடன், பெரும்பாலான நாய்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வாழ்கின்றன.

கடந்த வருடம் விசர் நாய்க் கடியினால் 24 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில், வீதியில் நாய்கள் மற்றும் மிருகங்களைக் கைவிட்டுச் செல்வோருக்கு 25,000 ரூபா அபராதமும் அதிகபட்சம் 6 மாத சிறைத்தண்டனையும் வழங்கும் திருத்தமொன்றைக் கொண்டுவரும் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மேலும், பொது இடங்களில் காணப்படும் நாய்களை வேறு இடத்திற்குக் கொண்டு செல்லும் நடைமுறைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.

street-dog

Related posts: