நாமலைக் கைது செய்வதற்கான காரணங்கள் உண்டாம் – நீதியமைச்சர்!

Wednesday, August 30th, 2017

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கவே கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் ராஜபக்சவினர் கோஷ்டி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதாக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தாஜூடீனை கொலை செய்யுமாறோ, அரச நிதியை தவறாக பயன்படுத்துமாறோ, நாங்கள் எவருக்கும் கூறவில்லை. நாமல் ராஜபக்ச போன்றவர்களை கைது செய்ய வேண்டுமாயின் தேவையான அளவுக்கு காரணங்களும் விடயங்களும் உள்ளன. சரியான முறையில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

விசாரணைகள் முடிந்த பின்னர் அதன் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படும். எவ்வளவு காலத்திற்கு பின்னர் விசாரணைகளுக்காக ராஜபக்ச குடும்பத்தினர் அண்மையில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சென்றனர் என்பதை முழு நாடும் அறியும். அவர்களை வேட்டையாடும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை.

கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் கோஷ்டி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நாட்டு மக்கள் மத்தியில் நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்தி குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்து வருகின்றனர். எனினும் எதிர்காலத்தில் கட்டாயம் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் தலதா அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்

Related posts: