நான் தேசிய பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கவில்லை – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிய கிடைத்தது – சாகல ரத்நாயக்க வாக்குமூலம்!

Saturday, August 22nd, 2020

நான் தேசிய பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கவில்லை. அதேபோன்று அந்த காலப்பகுதியில் இருந்த பிரதமரும் நிரந்தர உறுப்பினராக இருக்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் மாத்திரமே தேசிய பாதுகாப்பு சபையில் கலந்துகொள்வோம் என முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் துறை அமைச்சராக செயலாற்றியதாக சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் நேற்று சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டது.

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாம் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் மாத்திரமே சட்டம் மற்றும் ஒழுங்குகள் துறை அமைச்சராக செயலாற்றியதாக சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தாம் அமைச்சராக செயலாற்றிய காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பு சபையின் 5 கூட்டங்களில் கலந்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் அமைச்சராக செயலாற்றி காலப்பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தம்மால் நேற்றைய தினம் அந்தப் பிரிவில் முன்னிலையாக முடியாது என எழுத்துமூலம் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகி வாக்குமூலம் வழங்க அனுமதி வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தான் முன்கூட்டியே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்க முயன்றதாகவும் இதன்போது அவர் சுற்றுலாவுக்காக வெளிநாடு சென்றிருப்பதாக அறிவித்ததாகவும் குற்ற புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: